எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , » TNPSC | Keshub Chandra Sen | கேசப் சந்திர சென் | Short Notes

TNPSC | Keshub Chandra Sen | கேசப் சந்திர சென் | Short Notes

 

www.vendrukaattu.com

கேசப் சந்திர சென் (1838 - 1884) என்பவர் இந்தியாவின் வங்கத்தைச் சேர்ந்த இந்துமத தத்துவ அறிஞர் மற்றும் சீர்திருத்தவாதி ஆவார்.

இவருடைய தாத்தா இந்துமதத் தீவிர உணர்வாளரும் இராம் மோகன் ராய் கொள்கைகளுக்கு எதிரானவரும் ஆவார்.. இவர் இந்து மதச் சிந்தனைகளோடு கிறித்தவக் கோட்பாடுகளையும் சேர்த்துக்கொள்ள விரும்பினார்.

முன்னதாக 1855 ஆம் ஆண்டில் உழைக்கும் ஏழை மனிதர்களிடையே கல்வியைப் பரப்புவதற்காக ஒரு மாலைப் பள்ளியைத் தொடங்கினார். குட்வில் சகோதரத்துவம் என்ற அமைப்பில் செயலர் பொறுப்பை ஏற்றார். கிறித்தவச் சேவைப் பாதிரியார் ரெவெரென்ட் ஜேம்ஸ் லாங் என்பவரின் உதவியால் பிரிட்டிசு இந்தியர் சங்கத்தை தோற்றுவித்தார்.

பாங்கு ஆப் பெங்கால் என்ற ஒரு வங்கியில் கேசப் சென் எழுத்தராகப் பணிபுரிந்தார். சில காலம் கழித்து அவ்வேலையைத் துறந்து இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகளில் முழுமையாக ஈடுபட்டார். 1857 இல் பிரம்ம சமாஜத்தில் இணைந்தார்.

தேவேந்திரநாத் மிதவாத சீர்திருத்தவாதியாவார். ஆனால் மிதவாதச் சமாஜத்தில் அவருடன் பணியாற்றிய இளையவர்கள் விரைவான மாற்றங்களையே விரும்பினர். அவர்களுள் மிக முக்கியமானவர் கேசவ் சந்திரசென.

1866 இல் பிரம்ம சமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய "இந்திய பிரம்ம சமாஜத்தை" உருவாக்கினார்.

இதன்பின்னர் தேவேந்திரநாத் தாகூரின் அமைப்பு 'ஆதி பிரம்ம சமாஜம்' என அழைக்கப்படலாயிற்று.

குழந்தைத் திருமணத்தை சமாஜம் கண்டனம் செய்திருந்தபோதும் அதற்குமாறாக கேசவ் சந்திர சென் தனது பதினான்கு வயது மகளை இந்திய இளவரசன் ஒருவருக்குத் திருமணம் செய்து கொடுத்தபோது, குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்திய பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி சாதாரண சமாஜ் எனும் அமைப்பை நிறுவினர்.

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template